மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு தடை! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு தடை!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரு தினங்களுக்கு இறைச்சிக் கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீ தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய 26 மற்றும் 27 தினங்களில் நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் ஊடாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாதென்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு இறைச்சி விற்பனையையும் முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad