பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மீது லண்டனில் தாக்குதல் - விசேட பாதுகாப்பு கோறியுள்ள இந்திய, இஸ்ரேலிய தூதரகங்கள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மீது லண்டனில் தாக்குதல் - விசேட பாதுகாப்பு கோறியுள்ள இந்திய, இஸ்ரேலிய தூதரகங்கள்

லண்டனில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கற்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் கொண்டு தாக்கியுள்ளதுடன் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசாரையும் மீறி உயர்ஸ்தானிகராலயத்திற்குள் நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

மறுபுறம் அதனையொத்த மற்றுமொரு ஆர்ப்பாட்டம் லண்டனில் அமைந்துள்ள கட்டார் தூதரகத்திற்கு முன்பதாகவும் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்புகளில் கட்டார் நாட்டின் தலையீடுகளை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயத்திற்கு முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு பொருட்களை கொண்டு உயர்ஸ்தானிகராலயத்தை நோக்கி வீசியுள்ளதாக லண்டன் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனை தொடர்ந்து ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முறைப்பாடளித்துள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையாக நடந்துகொள்ளும் காட்சிகள் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளதாக லண்டன் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மறுபுறம் லண்டனில் அமைந்துள்ள இந்திய மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்புகள் கோரப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் மற்றும் கட்டார் தூதரகங்களுக்கு முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் பெயர் விபரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்ற கொலைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் லண்டன் செய்திகள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad