காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம் : யாழ் அரச அதிபர்..! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம் : யாழ் அரச அதிபர்..!

காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில் சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அந்த பகுதியினை முடக்குவதற்கான விண்ணப்பம் சுகாதாரப் பிரிவினரால் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பம் அரசாங்க அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதியைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad