பி.சி.ஆர் என நினைத்து அம்பியூலன்ஸைக் கண்டதும் தெறித்தோடிய பக்தர்கள் - யாழ். மீசாலை பகுதி ஆலயம் ஒன்றில் பரபரப்பு! - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

பி.சி.ஆர் என நினைத்து அம்பியூலன்ஸைக் கண்டதும் தெறித்தோடிய பக்தர்கள் - யாழ். மீசாலை பகுதி ஆலயம் ஒன்றில் பரபரப்பு!

மீசாலை வேம்பிராய் கல்லடி விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது.

இதன்போது நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் திருவிழாவை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர்.

ஆனாலும் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து வயல்களில் தஞ்சம் புகுந்ததால் 50 பேருடன் தேரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர அனுமதியளிக்கப்பட்டது.

பொலிஸார் சென்றதும் பக்தர்கள் திரும்பவும் ஒன்றுகூட முயன்ற போது அம்புலன்ஸ் வருகை தந்ததையடுத்து பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள பொலிஸாரே அம்புலன்ஸ் வண்டியுடன் வருகின்றனர் என்று கருதி பக்தர்கள் அங்கிருந்து தெறித்தோடினர்.

எனினும் பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகன்ற பின்னர் 50 பக்தர்களுடன் தேர் இருப்பிடத்துக்கு கொண்டுவரப்பட்டு தேர்த் திருவிழா நிறைவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad