ஆதிவாசிகளின் காணிகளை கையகப்படுத்துவதற்கு எதிரான மனு - ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

ஆதிவாசிகளின் காணிகளை கையகப்படுத்துவதற்கு எதிரான மனு - ஜூலை மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி முன்னணி நிறுவனங்களுக்கு சோளச் செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தாக்கல் செய்துள்ள மனுவை ஜூலை மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நேற்று (03) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரய ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் அமைச்சர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad