ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கல சோதனை ஓட்டம் முதல்முறையாக வெற்றிகரமாக நிறைவேறியது - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கல சோதனை ஓட்டம் முதல்முறையாக வெற்றிகரமாக நிறைவேறியது

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கனவுத் திட்டத்தின் அடிப்படையான ஸ்டார்ஷிப் விண்கல சோதனை ஓட்டம் முதல்முறையாக வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதர்கள் மற்றும் 100 தொன் எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தீவிர முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இந்த திட்டத்தின் அடிப்படையான ஸ்டார்ஷிப் விண்கல சோதனை ஓட்டம் கடந்த புதனன்று நடைபெற்றது.

டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் 10 கி.மீ தூரம் சென்று பின்னர் தரையில் வந்து செங்குத்தாக தரையிறங்கியது. 

கடந்த சோதனை ஓட்டங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில் இது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஐந்து முறை இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டங்கள் தோல்வியில் முடிந்தது. 

கடந்த டிசம்பர், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெற்ற சோதனை ஓட்டங்களில் ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டபோதும் நடு வானில் வெடித்துச் சிதறியது.

No comments:

Post a Comment