வனவிலங்கு பூங்காவிலிருந்து காணாமல் போன சிறுத்தை - மக்கள் பீதியடைய வேண்டாம், தேடும் பணி தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

வனவிலங்கு பூங்காவிலிருந்து காணாமல் போன சிறுத்தை - மக்கள் பீதியடைய வேண்டாம், தேடும் பணி தீவிரம்

சீனாவில் கிழக்கு நகரமான ஹாங்க்சோவுக்கு அருகிலுள்ள வனவிலங்கு பூங்காவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பிய சிறுத்தை ஒன்றை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ஹாங்க்சோ பூங்காவிலிருந்து தப்பிய மூன்று சிறுத்தைகளில் இதுவும் ஒன்றாகும். இரண்டு சிறுத்தைகள் வார இறுதியில் மீட்கப்பட்டன.

மாநில ஊடகங்களின்படி, மே 1 ஆம் திகதி உள்ளூர்வாசிகள் விலங்குகளைப் பார்த்ததாகக் தெரிவித்துள்ளனர், ஆனால் பூங்கா சனிக்கிழமையன்று சிறுத்தையை காணவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாமதத்திற்கு வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியுள்ளதோடு, மக்களை பீதி அடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வெய்போவில் (Weibo) வெளியிடப்பட்ட காணொளி காட்சிகளில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இருப்பது காணப்பட்டது.

மே 8 ஆம் திகதி இரண்டு விலங்குகள் மீட்கப்பட்டதாக உள்ளூர் அரசாங்கம் வெய்போவில் உறுதிப்படுத்தியது. ஆனால் ஒரு சிறுத்தை காணவில்லை.

இந்நிலையில், தேடுதல் குழு வேட்டை நாய்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்ரோனில் சிறுத்தை ஒன்றை தென்பட்டுள்ளது, ஆனால் மக்கள் அதை அணுக முயன்றபோது விலங்கு அங்கிருந்து தப்பி ஓடியதாக குளோபல் டைம்ஸ் இதழ் வெய்தி வெளியிட்டுள்ளது.

விலங்கு தளர்வாக இருக்கும்போது உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விலங்குகள் எவ்வாறு தப்பித்தது என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பூங்காவுக்கு பொறுப்பான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன உயிரியல் பூங்காக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அடிக்கடி விமர்சிக்கப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டில், ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு மிருகக்காட்சிசாலையில் ஒரு சிங்கம் அதன் பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று தப்பிய ஓடிய பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment