இலங்கையில் நேற்று 79,403 பேருக்கு சினோபார்ம், 10,189 பேருக்கு கோவிஷீல்ட், 3,335 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் வழங்கப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

இலங்கையில் நேற்று 79,403 பேருக்கு சினோபார்ம், 10,189 பேருக்கு கோவிஷீல்ட், 3,335 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

இலங்கையில் நேற்றைய தினம் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் அளவு 79,403 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 10,189 பேருக்கும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 3,335 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 925,242 ஆகவும், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 231, 557 ஆகவும் காணப்படுகிறது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 150,606 பேருக்கும், இரண்டாவது டோஸ் 2,435 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை 14,673 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment