இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 25 பேர் உயிரிழந்த சோகம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 25 பேர் உயிரிழந்த சோகம்

படகு விபத்துக்குள்ளானதால், ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளதேசத்தின் ஷிப்சார் நகர் அருகே உள்ள பத்மா நதியில் நேற்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றி வந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. 

இதனால் படகில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

25 பேரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் சிலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தரம் குறைந்த படகுகள், மோசமான பராமரிப்பு, அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட காரணங்களால் வங்காளதேசத்தில் இதுபோன்ற படகு விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad