நுவரெலியா மாவட்டத்தில் 24,308 பி. சி. ஆர் பரிசோதனையில் 2080 பேருக்கு தொற்று - 15 பேர் உயிரிழப்பு - தொடர்ந்தும் சிகிச்சையில் 422 பேர் - News View

Breaking

Post Top Ad

Friday, May 7, 2021

நுவரெலியா மாவட்டத்தில் 24,308 பி. சி. ஆர் பரிசோதனையில் 2080 பேருக்கு தொற்று - 15 பேர் உயிரிழப்பு - தொடர்ந்தும் சிகிச்சையில் 422 பேர்

நுவரெலியா மாவட்டத்தில் 24,308 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 2080 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா பிரதேசத்தில் ஐந்து பேரும் அம்பகமுவ பிதேசத்தில் நான்கு பேரும் வலப்பனை பிரதேசத்தில் மூன்று பேரும் ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் இரண்டு பேரும் கொத்மலை பிரதேசத்தில் ஒருவருமாக மொத்தம்15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஐந்து பிரதேச செயலகங்களான நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசங்களில் 422 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் வசந்த காலத்தில் 20 ஆம் திகதிக்கு பின்னர் நுவரெலியாவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் மாத்திரம் 78 பேர் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டு சிகிச்சை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2080 தொற்றாளர்கள இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் நுவரெலியா பிரதேசத்தில் 870 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியாவில் அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 

மேலும் ஹங்குராங்கெத்தையில் 483 தொற்றாளர்களும் கொத்மலையில் 296 தொற்றாளர்களும் அம்பகமுவ பிரதேசத்தில் 237 தொற்றாளர்களும் ஆக குறைந்த தொற்றாளர்களாக வலப்பனையில் 194 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள இஞ்ஜஸ்ட்றீ மற்றும் போடைஸ் பிலிங்க் போனி, பீரட் பாத்போட், போடைஸ், போடைஸ் நிசி டிவிசன், புளியாவத்தை நகரம், புளியாவத்தை மேற்பிரிவு, கீழ்பிரிவு ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. 

இது தவிர ஹங்குராங்கெத்தையில் ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவும் வலப்பனையில் நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தற்பொழுது வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ள குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நுவரெலியா பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கும் அம்பகமுவ பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும் வலப்பனை பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும் கொத்மலை பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்குமாக 1500 குடும்பங்களுக்கு இவ் உணவு பொதிகள் வழங்கப்படும்.

மேலும் தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஹங்குராங்கெத்த பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த பத்தனை ஸ்ரீபாத கல்லூரியிலும் ஒரு முகாம் இயங்குகின்றது. 

மேலும் அம்பேவல பிரதேசத்தில் கந்தேஎல்ல பகுதியில் இயங்கி வரும் இளைஞர் முகாமும் தனிமைப்படுத்தல் முகமாக இராணுவத்தின் உதவியுடன் மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad