15 தொன் உரத்துடன் சென்ற கொள்கலன் லொறி வளைவொன்றில் வீடொன்றில் புரண்டு விபத்து - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

15 தொன் உரத்துடன் சென்ற கொள்கலன் லொறி வளைவொன்றில் வீடொன்றில் புரண்டு விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் 15 தொன் உரத்தை ஏற்றி பயணித்த கொள்கலன் லொறியொன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வீதியில் உள்ள வளைவொன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக் கொண்டு பள்ளத்தில் இருந்த வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.

லொறி வீழ்ந்ததலில் வீட்டிலிருந்த எவருக்கும் எந்த வித பாதிப்புகள் ஏற்படாத போதிலும் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே லொறி விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பல்வேறு தடைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad