10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய கூட்டமைப்பு

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந்தநிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாட்டில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.‌

கூட்டத்தில் உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தொடர ஐரோப்பிய கூட்டமைப்பின் 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உறுதி பூண்டனர்.

மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு உலகளாவிய சமமான அணுகலை உறுதி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment