எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா

(ஆர்.யசி)

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காரியாலயதில் பணிபுரியும் பத்து ஊழியர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த நபர்களையும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வீடுகளில் சுய தனிமையில் இருக்குமாறும் சுகாதார தரப்பு வலியுறுத்தியுள்ளது.

எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் சகருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் காரியாலய ஊழியர்கள் என சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை எடுத்ததில் இன்றையதினம் கிடைத்த பி.சி.ஆர் அறிக்கையின் பிரகாரம் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அலுவலக ஊழியர்களில் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வேத்திரதாரி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த ஊழியர்களின் குடும்பத்தினர், பாராளுமன்றத்தில் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்கள் என சகலரும் உடனடியாக வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தின் மூலமாக தெரிய வருகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுபினர்களான முஜிபூர் ரஹ்மான், நளின் பண்டார ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad