கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் வீதியில் கிடந்த கிராம அலுவலர் மற்றும் மனைவி - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் வீதியில் கிடந்த கிராம அலுவலர் மற்றும் மனைவி

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவின் முழங்காவில் கிராம அலுவலரும் அவரது மனைவியும் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு ஏழு மணியளவில் முழங்காவில் பல்லவராயன் கட்டுச் சந்தி வீதியில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் விழுந்து கிடப்பதனை இராணுவத்தினர் அவதானித்துள்ளனர்.

உடனடியாக பட்டா ரக வாகனத்தில் கிராம அலுவலரின் மனைவியை முழங்காவில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கிராம அலுவலர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் முழங்காவில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

விபத்தினால் மரணம் சம்பவித்ததா? அல்லது யானை தாக்கி இறந்தனரா என்பது தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் பெற்றோர்களான கிராம அலுவலர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

(கிளிநொச்சி நிருபர் தமிழ்செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad