மின் கம்பத்தில் தென்னை வீழ்ந்ததால் கிளிநொச்சியில் ஐந்து கிராமங்கள் இருளில்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

மின் கம்பத்தில் தென்னை வீழ்ந்ததால் கிளிநொச்சியில் ஐந்து கிராமங்கள் இருளில்!

தற்போது வீசி வரும் கடும் காற்றினால் மின் கம்பத்தின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததால் கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களுக்கான மின்சாரம் நேற்றிரவு துண்டிக்கப்பட்டுள்ளதால் குறித்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் புலோப்பளை பிரதான வீதியில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனை அடுத்து அறத்திநகர், அல்லிப்பளை, புலோப்பளை கிழக்கு, மேற்கு, அரசன் குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்குரிய மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இன்று மீண்டும் சீர் செய்யப்பட்டு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கிளிநொச்சி நிருபர் தமிழ்செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad