திடீர் உயிரிழப்பு : கொட்டகலையில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

திடீர் உயிரிழப்பு : கொட்டகலையில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா - கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டத்தில் 72 வயதான ஆணொருவர், சுகயீனம் காரணமாக திடீரென நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, மரணித்தவர் வசித்த தொடர் குடியிருப்பு தொகுதியில் உள்ள மேற்குறித்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

தனிமையிலுள்ளவர்கள் தொடர்பில் பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொவிட் தொற்றால் அண்மையில் உயிரிழந்தமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad