எதிர்க்கட்சிகளால் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தடுப்பூசி வழங்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

எதிர்க்கட்சிகளால் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தடுப்பூசி வழங்கும் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகளால் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மக்களுக்கு அசௌகரியமற்ற வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

வத்தளை மற்றும் நீர்கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், வத்தளையில் 38225 பேருக்கும், நீர்கொழும்பில் 35000 பேருக்கும் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

கொவிட்-19 கட்டுப்படுத்தலுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள வயதெல்லையிலுள்ள சகலருக்கும் தடுப்பூசி வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

எதிர்க்கட்சிகளால் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மக்களுக்கு அசௌகரியமற்ற வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். தடுப்பூசி வழங்கும் அதேவேளை பொதுமக்களின் ஒத்துழைப்பும் வைரஸ் கட்டுப்படுத்தலில் முக்கிய பங்கினை வகிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad