அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ள ஒரு இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ள ஒரு இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசிகளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் முற்பதிவு செய்யப்பட்ட 7 இலட்சம் தடுப்பூசிகளின் முதற் தொகுதியே எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய தடுப்பூசிகளை மாதாந்தம் நாட்டிற்கு வழங்குவதற்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 12 ஆம் திகதியே கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தடுப்பூசி ஏற்றப்பட்டு 21 நாட்களில் இரண்டாவது தடுப்பூசியை ஏற்ற வேண்டும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இதனிடையே, ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் எஸ்ட்ரா செனிக்கா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad