பொலிஸ் தலைமையக இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

பொலிஸ் தலைமையக இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது.

www.ineed.police.lk எனும் இணையத்தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்தது.

இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப் பெற்று, பொலிஸ் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள திருட்டுபோன தொலைபேசிகளின் EMI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ஒருவர் உறுதி செய்து கொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் கூறுகின்றனர்.

திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே, பொலிசார் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment