“ சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது” - முன்னிலை சோசலிச கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

“ சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது” - முன்னிலை சோசலிச கட்சி

(இராஜதுரை ஹஷான்)

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது. ஈழம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. தேசப்பற்று என்பது வெறும் தேர்தல் கால பிரசாரமாகவே காணப்படுகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

முன்னிலை சோசலிய கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சிங்கள மக்களின் மனங்களை வென்று அவர்களின் வாக்குகளை பெறுவதற்காவே ஈழம் என்ற சொற்பதத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தேர்தல் பிரசார மேடைகளில் ஈழம் என்ற சொல் பிரதான இடத்தை பிடித்திருந்தது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு உருவாக்கத்திற்கான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பிறிதொரு நாட்டை உருவாக்கும் நோக்கில் இச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வர்த்தமானி மார்ச் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நகரத்தை அமைக்கும் போது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எதற்காக கடலை நிரப்பி நகரமொன்று அமைக்கப்படுகின்றது என குறிப்பாக ஒரு நாட்டில் விசேட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கும் போது அரசாங்கத்துக்கு சொந்தமான பழைய இடங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பர்.

ஆனால் இலங்கையின் பூகோளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய நகரமொன்றை அமைப்பதற்காக பாரியளவில் சுற்றாடல் அழிக்கப்பட்டது.

அன்று சுற்றாடல் அழிவை காரணம் காட்டியே பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று இந்த துறைமுக நகரம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று மார்ச் 19ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் முதலீடு, நிதி, தகவல் தொழில்நுட்பம், சட்டம், பொறியியல் தொழிநுட்பம், வர்த்தகம் அல்லது கணக்காய்வு உள்ளிட்ட விடயங்களில் நிபுணர்களே இந்த குழுவில் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டாலும் நியமிக்கப்பட்ட குழுவில் மத்திய வங்கி, நிதியமைச்சு உள்ளிட்ட நாட்டின் பிரதான நிறுவனங்கள் கூட இதில் உள்ளீர்க்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதிக்கு தேவையானவர்களே ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொதுச் சட்டம் செயற்படுத்தப்படாத பிரதேசமாகவே இது விளங்கவுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என கூறி தேச வழமைச் சட்டம், முஸ்லிம் விவாகச் சட்டம் என்பவற்றை அடி்படையாக வைத்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

விவாகச் சட்டத்தில் வேறுபாடுகள் உள்ளதென கூச்சலிட்டவர்கள் இலங்கைளின் பொருளாதார கொள்ககையை மீறும் வகையில் நிலமொன்று பெயரிடப்பட்டுள்ளதை தொடர்பில் அவதான் செலுத்தாமல் இருப்பது வேடிக்கையானது.

இலங்கை முதலீட்டு சபையின் விசேட ஏற்பாடுகள் சட்டமானது இந்த நகரத்தை நிதி நகரம் என்று கூறினாலும் கருப்பு பணத்தை வௌ்யைாக்கும் நடவடிக்கையே இங்கு முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் சூதாட்டம், கெசினோவும் மேம்படுத்தப்படவுள்ளது.

மேலும் தொழிலாளர்களின் உரிமைககளை இரத்துச் செய்யும் இடமாகவும் இந்த நகரத்தின் செயற்பாடுகளில் நிதியமைச்சு மத்திய வங்கி பாராளுமன்றம் தலையிடுவதற்கான அதிகாரம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment