‘என்-ஜாய்’ தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் : சீல் வைக்கப்பட்டது களஞ்சியசாலை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

‘என்-ஜாய்’ தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் : சீல் வைக்கப்பட்டது களஞ்சியசாலை

‘என்-ஜாய்’ என்ற பெயரில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது.

என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் விவகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் உள்ளூர் கொப்பராவைப் பயன்படுத்தி என்-ஜாய் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்பட்டது என நுகர்வோர் விவகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின்படி, சந்தையில் உள்ள அனைத்து தேங்காய் எண்ணெயிலும் நச்சுத்தன்மை உள்ளதாக என்பது குறித்து நுகர்வோர் விவகார சபை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களில் என்-ஜாய் தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையிலும் அந்த எண்ணெயில் அஃப்லாடாக்சின் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேங்காய் எண்ணெயை சந்தையில் இருந்து அகற்ற நுகர்வோர் விவகார சபை முடிவு செய்துள்ளது.

அதேநேரம், கிராண்ட்பாஸில் உள்ள என்-ஜாயின் எண்ணெய் களஞ்சியசாலைக்கு நுகர்வோர் விவகார சபை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad