மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட எம்பிக்களான காவிந்த ஜயவர்த்தன, ஹெட்ட அப்புகாமி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட எம்பிக்களான காவிந்த ஜயவர்த்தன, ஹெட்ட அப்புகாமி

ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவிந்த ஜயவர்த்தன, ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம் செய்தனர்.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் முதல் தடவையாக தாக்குதல் நடந்த ஆலயத்தில் இந்த ஆண்டுதான் ஆராதனை நடாத்தவுள்ளதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு அதனை அவர்கள் செய்வார்கள் என நினைக்கின்றேன் எனவும் போதகர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment