நச்சுக் கழிவு நீர்க் கசிவால் புளோரிடாவில் நெருக்கடி அறிவிப்பு - மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

நச்சுக் கழிவு நீர்க் கசிவால் புளோரிடாவில் நெருக்கடி அறிவிப்பு - மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

புளோரிடாவின் டெம்பா பே குளத்தில் ஏற்பட்ட நச்சுக் கழிவு நீர்க் கசிவால் மாநிலத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் பின்னி பொயின்ட் நீர்த் தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு வீதி மூடப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறுமாறு குறுந்தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

பழைய பொஸ்பரஸ் ஆலையிலிருந்து, பெரும் அளவான பொஸ்பரஸ், நைட்ரஜன் கலந்த நீர், 77 ஏக்கர் நீர்த் தேக்கத்தில் கலந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கசிவைச் சரி செய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் புளோரிடாவின் ஆளுநர் ரொன் டிசன்டிஸ் அங்கு கடந்த சனிக்கிழமை நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad