வாழைச்சேனையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

வாழைச்சேனையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இராணவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் இன்று (21) உத்தரவிட்டார்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவமுகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவரை சம்பவதினமான நேற்று இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 3 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment