பாடசாலைக்குச் சென்ற 15 வயது சிறுமி மாயம் - திருக்கோவிலில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

பாடசாலைக்குச் சென்ற 15 வயது சிறுமி மாயம் - திருக்கோவிலில் சம்பவம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் தரம் 9 ஆம் கல்வி கற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) பாடசாலைக்கு சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயது சிறுமி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து மாலை வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்தனர்.

குறித்த சிறுமி பாடசாலை முடிவடையும் வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம் வாங்கிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருவருகின்றனர்.

கேசரி

No comments:

Post a Comment