ராஜித, மொஹமட் ரூமி ஆகியோருக்கெதிரான வழக்கு ஜூலையில் விசாரணை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

ராஜித, மொஹமட் ரூமி ஆகியோருக்கெதிரான வழக்கு ஜூலையில் விசாரணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூலை மாதம் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ் வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் தொடர்பாக ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக இவ்விருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad