யாழ்ப்பாணம், மாதகல் கடலில் ஆட்கள் எவருமில்லாத படகிலிருந்து 240 கிலோ கஞ்சா மீட்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

யாழ்ப்பாணம், மாதகல் கடலில் ஆட்கள் எவருமில்லாத படகிலிருந்து 240 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் சுமார் 240 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகொன்று நிற்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இந்த படகில் ஆட்கள் எவரும் இருக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

படகை சோதனையிட்டபோது கஞ்சா பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் நிறை சுமார் 240 கிலோ கிராம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad