தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன -அரச நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன : அமைச்சர் காமினி லொகுகே - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன -அரச நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன : அமைச்சர் காமினி லொகுகே

(இராஜதுரை ஹஷான்)

போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளை திருத்திக்கொண்டு நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்போம் என போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்ற காலத்தில் இருந்து பல சவால்கள் ஏற்பட்டன. பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. பலம் வாய்ந்த நாடுகளினால்கூட கட்டுப்படுத்த முடியாத வைரஸ் பரவலை அரசாங்கம் குறுகிய காலத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கொவிட்-19 தடுப்பூசி பெருந்தெகையான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

எதிர்க்கட்சியினர் பல பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை குறுகிய காலத்தில் செயற்படுத்தியுள்ளோம். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தினை உள்ளடக்கத்தை 2023 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளை நாட்டு மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றை திருத்திக்கொண்டு அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பது அவசியமாகும். 

இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியாக ஒன்றினைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளோம். கூட்டணிக்குள் ஒரு சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. பேச்சுவார்த்தை ஊடாக முரண்பாடுகளுக்கு தீர்வு எட்டப்படும் என்றார்.

No comments:

Post a Comment