சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது

கொழும்பு - மெகசின் சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் ஒருவர், இன்று (13) சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் வசமிருந்த 2 கிராம் 32 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற ஆடைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து ஹெரோயினை கொண்டு சென்றுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment