இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி - ஏனையோருக்கும் டுவிட்டரில் அறிவுரை - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி - ஏனையோருக்கும் டுவிட்டரில் அறிவுரை

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை காலை பெற்றுக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்ட அவர், நேற்று தனது இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்டுள்ளார். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad