கொரோனா அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களை வெளியிட்டது இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

கொரோனா அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களை வெளியிட்டது இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களும் மேலும் குருணாகல் மாவட்டமும் கொவிட் பரவல் அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படுகின்ற அபாயம் மிக்க வலயமாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை மிக அபாயமுடையதாகும். குறிப்பாக மேல் மாகாணத்தில் சில பகுதிகளிலும் ஏனைய பகுதிகளில் பல கிளை கொத்தணிகள் பதிவாகியுள்ளன. இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் வார இறுதி விடுமுறை நாட்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

வரையறுக்கப்பட்டளவிலேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

எனவே தற்போது நூறு வீத பொறுப்பு பொது மக்களிடமே வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் வாரங்களில் அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வதோடு , அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment