15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் ஏமாற்றிய மருத்துவமனை ஊழியர் சிக்கினார் - News View

Breaking

Post Top Ad

Saturday, April 24, 2021

15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் ஏமாற்றிய மருத்துவமனை ஊழியர் சிக்கினார்

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் ஏமாற்றிய மருத்துவமனை ஊழியர் ஒருவர் மீது நீண்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு இதுவரை அத்தனை ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் யாரும் ஏமாற்றியது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், 15 ஆண்டுகளாக அவர் வேலைக்கான சம்பளத்தைத் தொடர்ந்து பெற்றுள்ளார்.

அவ்வாறு, அவர் பெற்ற மொத்தத் தொகை 530,000 யுரோக்களாகும். அரசாங்க ஊழியரான அவர், கலாபிரியா வட்டாரத்தில் உள்ள மருத்துவமனையில் 2005ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார்.

ஆனால், அப்போதிலிருந்தே அவர் வேலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டதாக பொலிஸார் கூறினர். அவருக்கு எதிராகப் புகார் செய்யக்கூடாது என்று தமது முகாமையாளரை அந்த ஆடவர் மிரட்டியுள்ளார்.

அந்த முகாமையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற பின் அவருக்கு அடுத்து வந்த முகாமையாளர் ஓர் ஊழியர் வராததைக் கவனிக்கவே இல்லை. தற்போது, அந்த ஆடவர் மோசடி, அலுவலகத்துக்கு வராதது ஆகியவற்றுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவர் வராததைக் கவனிக்கத் தவறியதற்காக மருத்துவமனையில் வேலை செய்யும் 6 முகாமையாளர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad