தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நடமாடும் வைத்தியசாலைகளை உருவாக்குங்கள் : அரசாங்கத்தை வலியுறுத்தும் எரான் விக்கிரமரத்ன - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நடமாடும் வைத்தியசாலைகளை உருவாக்குங்கள் : அரசாங்கத்தை வலியுறுத்தும் எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

உலக நாடுகளில் தற்போது காணப்படும் நிலைமைக்கு அமைய வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற முடியாது. எனவே நாட்டில் மருத்துவ கட்டமைப்பை ஸ்திரப்படுத்தும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நடமாடும் வைத்தியசாலைகளை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு 15 பில்லியன் தேவைப்படுகிறது. சீனி வரி குறைப்பின் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கா விட்டால் அதன் மூலம் தடுப்பூசியைப் பெற்றிருக்க முடியும். 

இவ்வாறான நிலையில் இலங்கையில் தற்போது நிலைமாறிய வீரியம் மிக்க வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை காணப்படும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

எனவே இப்போதாவது தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோருகின்றோம். அத்தோடு நடமாடும் வைத்தியசாலைகளையும் நிருவுமாறு வலியுறுத்துகின்றோம். அத்தோடு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் மேலதிகமாக கொள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையில் மருத்துவ கட்டமைப்பை ஸ்திரப்படுத்த உதவுமாறு நட்பு நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad