இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா : 3 ஆயிரத்து 645 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா : 3 ஆயிரத்து 645 பேர் பலி

இந்தியா கொரோனாவின் 2 ஆவது அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 இலட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 83 இலட்சத்து 76 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனாவால் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 04 ஆயிரத்து 832 ஆகி இருக்கிறது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்து 86 ஆயிரத்து 878 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 30 இலட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்தியாவில் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 கோடியே 20 ஆயிரத்து 648 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இதுவரை இந்தியாவில் செலுத்தப்பட்டிருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad