யாழில் பன்றி இறைச்சி, துப்பாக்கி, வெடி மருந்துகளுடன் மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

யாழில் பன்றி இறைச்சி, துப்பாக்கி, வெடி மருந்துகளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன், மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் காட்டு பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நடத்திய தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடி பொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment