யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இரு வேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர், ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், பொம்மைவெளி 8ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், 5 கிராம் 750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad