முல்லைத்தீவில் தந்தை பலி, மகன் படுகாயம் - டிப்பர் வாகனத்துடன் சாரதி கைது - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

முல்லைத்தீவில் தந்தை பலி, மகன் படுகாயம் - டிப்பர் வாகனத்துடன் சாரதி கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் பாடுகாயமடைந்துள்ளார்.

இன்று (05) காலை வேளை மோட்டார் சைக்கிலில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 வயதுடைய வள்ளிபுனம் ஜெயரசா என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment

Post Bottom Ad