இந்திய தூதரக உயரதிகாரியுடன் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிகுமார் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

இந்திய தூதரக உயரதிகாரியுடன் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிகுமார் சந்திப்பு

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிகுமார் அண்மையில் இந்திய உயர் உயர்ஸ்தானிகராலயத்தில் அதன் அரசியல் அபிவிருத்தி ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் பானு பிரகாஷை சந்தித்து, மலையக மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துக் கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையிட்டு இந்திய அரசாங்கத்துக்கு தனது நன்றிகளை ரவிகுமார் தெரிவித்தார்.

மலையக மக்கள் மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் மட்டுமன்றி அவர்கள் வடக்கு முதல் தெற்கு வரை பல மாவட்டங்களில் சிதறி வாழ்வதை அவர் சுட்டிக்காட்டிய ரவிகுமார் மக்கள் நலத்திட்டங்கள் முல்லைதீவு, கிளிநொச்சி, களுத்துறை, மாத்தறை போன்ற மாவட்டங்களில் வாழும் இம் மக்களையும் எட்டச்செய்ய வேண்டும் என்பது எனது அரசியல் பயணத்தில் முக்கிய நோக்கம் எனவும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் பேராசிரியர் சோ. சந்திரசேகரனும் கலந்துகொண்டார். இந்திய அரசாங்கத்தின் பெருந்தோட்ட பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் அம்மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என பேராசிரியர் இதன் போது தெரிவித்தார்.

கலந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மலையக மக்களுக்கான ஒர் தேசிய பல்கலைக்கழகத்தை மலையக கற்றறிவாளர்கள் இடைவிடாது கோருவதற்கான காரணங்களை அரசியல் பிரிவு அதிகாரி ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

இலங்கையுடனான நல்லுறவுகளைப் பேணுவதும் மக்கள் நலமேம்பாட்டுக்கு உதவுவதுமே இந்தியாவின் கொள்கை என இதன்போது தூதரக அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment