பிணை முறி வழக்கை அர்ஜுன் மகேந்திரன் இன்றி முன்னெடுக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

பிணை முறி வழக்கை அர்ஜுன் மகேந்திரன் இன்றி முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள வெளிநாட்டிலிருக்கும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி.புஞ்சிஹேவா ஆகியோரின்றி வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் நேற்று (29) அனுமதி வழங்கியுள்ளது.

மார்ச் 31, 2016 அன்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தில் ரூ.15 பில்லியன் மதிப்புள்ள பத்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் அவரது சக பிரதிவாதிகள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கில் அரச தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம நடத்தை விதிகளின் 458 வது பிரிவின் பிரகாரம் வழக்கின் மூன்றாவது பிரதிவாதிகளாக அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோரின்றி வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி இருந்தார்.

அதன் பிறகு, நீதிமன்றத்தின் அனுமதியுடன், பிரதிவாதியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிடம் அரச சட்டத்தரணி சான்றுகளை பதிவு செய்தார்.

No comments:

Post a Comment