தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படும் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையம் - பாம் ஒயில் உள்ளிட்ட வேறு எண்ணெய்களை கலக்க வர்த்தமானி வெளியிட்ட ரிசாத் பதியூதீன் - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படும் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையம் - பாம் ஒயில் உள்ளிட்ட வேறு எண்ணெய்களை கலக்க வர்த்தமானி வெளியிட்ட ரிசாத் பதியூதீன்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிப்பதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அப்லடொக்ஸின் அடங்கிய தேங்காய் எண்ணெய் 2016ஆம் ஆண்டு தொடக்கம் பாவனையில் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன், தேங்காய் எண்ணெய்யில் பாம் ஒயில் உள்ளிட்ட வேறு எண்ணெய்களை கலக்கக் கூடியவாறு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

2017ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயில் 76 சதவீதம் விசத்தன்மை அடங்கிய இரசாயன கூறு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு இருப்பதாக தற்போதைய அரசாங்கம் தர நிர்ணய சபையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தேங்காய் எண்ணெய் மக்களின் பாவனைக்காக விநியோகிக்கப்படவில்லை. அப்லடொக்ஸின் அடங்கிய பழைய கொப்பறாவைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதால் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இந்த தேங்காய் எண்ணெயில் காணப்படுகின்றது. 

அதனால் அரசாங்கம் அங்கீகரித்துள்ள இறக்குமதியாளர்களின் எண்ணெய்களையும் வீடுகளில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயையும் நாளாந்தத் தேவைக்குப் பயன்படுத்துவது முக்கியம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் தேய்காய் எண்ணெயைப் பரிசோதிப்பதற்காக இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையமும், சுகாதார அமைச்சும் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிலையத்தின் தரப் பாதுகாப்புப் பணிப்பாளர் திருமதி தீபா நீலகாந்தி தெரிவித்துள்ளார்.

தரக்கட்டுப்பாட்டு நிலையமும், சுகாதார அமைச்சும் இணைந்து அண்மையில் பரிசோதனைக்கு உட்படுத்திய ஆறு தொகுதி எண்ணெய்க் களஞ்சியங்களில் கூடுதலான அஃப்லொரொக்சின் அடங்கியிருந்ததாக இனங்காணப்பட்டுள்ளது. தரமற்ற இந்த தேய்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்வதற்காக சுங்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுங்கப் பிரிவும் இந்த எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனால் இந்தத் தேய்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு கிடைத்திருப்பதாக இந்நாட்களில் வெளியாகும் செய்தியில் எந்த அடிப்படையும் இல்லை என திருமதி நீலகாந்தி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment