5 இலட்சம் டொலர்கள் மதிப்புள்ள ஓவியத்தை தவறுதலாக சேதப்படுத்திய தம்பதியர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

5 இலட்சம் டொலர்கள் மதிப்புள்ள ஓவியத்தை தவறுதலாக சேதப்படுத்திய தம்பதியர்

தென் கொரியாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட சுவர் ஓவியம் ஒன்றை ஒரு தம்பதியர் தவறுதலாக சேதப்படுத்தியுள்ளனர்.

அந்த ஓவியத்திற்கு முன்னால் வண்ணப் பூச்சு மற்றும் தூரிகைகள் வைக்கப்பட்டிருந்ததால் அது பார்வையாளர்களுக்கு என நினைத்து ஓவியத்திற்கு மேலால் அவர்கள் வர்ணம் தீட்டியுள்ளனர்.

'பங்குபற்றுபவர்களுக்கு அனுமதி உள்ளதாக நினைத்து அவர்கள் தவறு ஒன்றை செய்துள்ளனர்' என்று சோலில் நடைபெற்ற கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

ஓவியத்தில் புதிதாக தூரிகை பட்டிருப்பதை கண்டுபிடித்த பணியாளர்கள் சி.சி.டி.வி காட்சியை பார்த்தபோது 20 வயதுகளில் இருக்கும் ஆண் மற்றும் பெண் இருவர் தெரியாமல் சேதம் ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் சுமார் 500,000 டொலர்கள் மதிப்புக் கொண்டதாகும். இதனை அமெரிக்க சுவரோவியரான ஜோன்வன் 2016 ஆம் ஆண்டு சோலில் வைத்து பார்வையாளர்கள் முன் தீட்டி இருந்தார். இந்த ஓவியம் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்தது.

No comments:

Post a Comment