சட்டவிரோதமாக இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்படும் - எச்சரித்தார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

சட்டவிரோதமாக இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்படும் - எச்சரித்தார் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் சட்டவிரோமாக இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் காலவரையறை இன்றி மூடப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகின்ற வேளையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாடசாலைகள் மற்றும் பிரிவெனா கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் தனியார் கல்வி நிலையங்கள் சட்ட விரோதமாக இயங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த கல்வி நிலையங்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் காலவரையறையின்றி மூடப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு சட்டவிரோதமாக இயங்கும் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கூட்டங்கள் கூட்ட வேண்டாமெனவும் மக்கள் ஒன்று கூட வேண்டாமெனவும் அரசாங்கத்தினால் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான கல்வி நிலையங்கள் இயங்குவது பிரதேசத்தின் இயல்பு நிலையை பாதிக்குமெனவும் தெரிவித்தார்.

தற்போது பரவி வருகின்ற கொவிட்-19 மூன்றாவது அலை மிகவும் வேகமானதாகவும், விரைவாகவும் காணப்படுவதால் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும், தேவை இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவித்துள்ளார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment