கிழக்கு புர்கினா பாசோவில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

கிழக்கு புர்கினா பாசோவில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் பலி

கிழக்கு புர்கினா பாசோவில் சரணாலயம் ஒன்றில் வைத்து கடத்தப்பட்ட இரு பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஒரு அயர்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஐரோப்பியர்கள் விலங்கு வேட்டைக்கு எதிராக ரோந்து சென்றிருந்தபோதே கடந்த திங்களன்று ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் உயிரிழந்ததை புர்கினா பாசோ அரச அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனர். இதன்போது கடத்தப்பட்ட உள்நாட்டு படை வீரர் பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உறுதிசெய்யப்படவில்லை.

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ பெரும்பாலான அண்டை நாடுகள் போன்று இஸ்லாமியவாத ஆயுதக் குழுக்களில் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு முகம்கொடுப்பதால் பெரும் பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

புர்கினா பாசோ, அதேபோன்று மாலி மற்றும் நைகர் நாடுகளில் இஸ்லாமியவாதக் குழுக்கள் வெளிநாட்டினர் பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad