களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் வீசப்பட்ட பொதிகளிலிருந்து போதைப் பொருட்கள், தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய இரு பொதிகள் வீசப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரவு வேளையிலேயே இவ்வாறு பொதிகள் எறியப்பட்டுள்ளன.

இதன்போது கடந்த செவ்வாய்க்கிழமை எறியப்பட்ட பொதியிலிருந்து, ஹெரோயின் போதைப் பொருட்கள் என்று கருதப்படும் போதைப் பொருள் அடங்கிய 158 பக்கற்றுகளும், 20 கிராம் கஞ்சா போதைப் பொருள், இரு தொலைபேசிகள், 30 போதை வில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் மறுநாள் புதன்கிழமை எறியப்பட்டிருந்த பொதியிலிருந்து, 6 தொலைபேசிகள், 10 புகையிலைகள், 2 மின்னேற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் ,கைப்பற்றப்பட்ட தடைச் செய்யப்பட்ட பொருட்களை களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment