வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து : 11 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 28, 2025

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து : 11 பேர் பலி

கென்யாவின் குவாலே பகுதியில், இந்தியப் பெருங்கடலின் கரையோரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானம், பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப் பகுதிக்கு செல்லும் வழியில், உள்ளூர் நேரப்படி காலை 5.30 மணிக்கு (GMT 2:30) விழுந்ததாக கென்யா சிவில் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Mombasa Air Safari நிறுவனம், இந்த விமானத்தில் 8 ஹங்கேரியர்கள், 2 ஜேர்மனியர்கள் மற்றும் 1 கென்யா பைலட் பயணம் செய்ததாகவும், அனைவரும் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு ஆதரவு வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கம்” என நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் தீப்பற்றி எரியும் விமானம் மற்றும் சிதறிய பாகங்கள் உள்ள புகைப்படங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment