மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, April 25, 2021

மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறியும் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை, மட்டு. நகர் பகுதியில் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது, முகக் கவசம் அணியாமல் பயணங்களை மேற்கொள்பவர்களை பொலிஸார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

மட்டக்களப்பு நகர்ப் பகுதியான கல்லடிப்பாலம், திருகோணமலை வீதி வைச்சந்தி, பிரதான பேருந்து நிலையப்பகுதி மற்றும் பார்வீதி போன்ற பிரதான நான்கு இடங்களில் இந்த வீதிச் சோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக குறித்த பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad