திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த குறித்த நபரை மீட்டு மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (3) மாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹதிவுல்வெவ 01ம் கண்டத்தில் வசித்து வரும் டபிள்யூ.எம்.வசந்த திசாநாயக்க (35 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment