அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை வழங்குவது ஒழுங்கற்ற செயல் - இலங்கை மருத்துவ சங்கம் சுகாதார அமைச்சருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை வழங்குவது ஒழுங்கற்ற செயல் - இலங்கை மருத்துவ சங்கம் சுகாதார அமைச்சருக்கு கடிதம்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை எமது பிரஜைகளுக்கு வழங்குவது ஒழுங்கற்ற செயற்பாடாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அந்த சங்கம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்குக்கூட உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத ஒரு தடுப்பூசியை எமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது ஒழுங்கற்றச் செயல் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியின்றி எந்தவொரு தடுப்பூசியையும் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அந்த சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment