அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம், கடந்த அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களை மகிழ்விக்க சில தீர்மானங்களை எடுத்தது என்கிறார் அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, April 3, 2021

அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதியிடம், கடந்த அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களை மகிழ்விக்க சில தீர்மானங்களை எடுத்தது என்கிறார் அமைச்சர் பிரசன்ன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நாளை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையே அமைச்சரவை உப குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இறந்துபோனவர்களுக்கு எம்மால் நீதியை வழங்க முடியாது. ஆனால், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கல் வேண்டுமென்பதுடன், மீண்டும் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறாத வண்ணமே அரசாங்கம் செயற்பட வேண்டும்.

கடந்த அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களை மகிழ்விக்க சில தீர்மானங்களை எடுத்திருந்தது. தாக்குதல்களின் பின்னரும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தலைவர்கள் தலைமையில் ஒரு தெரிவுக்குழுவையும் அமைத்திருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளைத்தான் கடந்த அரசாங்கம் செய்திருந்தது. 

நாம் அவ்வாறு செயற்பட மாட்டோம். தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்து குற்றவாளிகளாக உள்ளவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கையெடுப்போம் என்றும்” அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment