முல்லைத்தீவில் யாசகம் பெற்று வந்தவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

முல்லைத்தீவில் யாசகம் பெற்று வந்தவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நேற்று (19) இரவு வீதியில் படுகாயமடைந்த நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருகையில் ஹட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த 36 அகவையுடைய நல்லு சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.

இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னிலையில் நேற்று தண்ணீரூற்று பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார் இவரை அவசர நோயாளர் காவு வண்டிமூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.​

விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்து காரணமாக இவர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment